எது சனநாயகப் பண்பாடு என்பது குறித்து எனக்குச் சில கேள்விகள் இருக்கிறது.
எனது அனுபவம் மற்றும் நான் நான் படித்த கட்டுரைகள் எனக்குள் ஏற்ப்படுத்திய பாதிப்பு இது.
எனது அனுபவம் மற்றும் நான் நான் படித்த கட்டுரைகள் எனக்குள் ஏற்ப்படுத்திய பாதிப்பு இது.
ஒரு நாட்டு மக்கள் தங்கள் கருத்துக்களைத் தேர்தல் மூலமாக பதிவு செய்து தாங்கள் சார்ந்த அல்லது சார்ந்திரிக்கிற அமைப்பின் மூலமாக தங்கள் சார்பாளர்களைத் தேர்ந்தெடுத்து, தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தனிக்கட்சியாகவோ கூட்டனியமைத்தோ ஆட்சியமைப்பது
என்பதுதான் மக்களாட்சி அல்லது சனநாயகம். இவ்வாறான கருத்துப் பொது நிலையை
விரிவுபடுத்தி அதன் எல்லைகளை பரவலாக்கிக் கொள்ளும் புத்திசாலித்தனமே சனநாயகப்
பண்பாடெனில் இந்தக் கருத்துத் தினிப்பிர்க்கு மக்கள் எப்படி ஆட்படுகிறார்கள். மக்களின்
மூளை இந்தச் சனநாயகக் கட்டமைப்புக்காகக் எப்படி கட்டுப்படுத்தி வைக்கப்படுகிறது.
இது ஒரு குழப்பமான சமூகச் சூழலாகப் படுகிறது.
இப்படியான சமூகச் சூழலில், வீட்டை விட்டு, வாழ்வாதாரத்திற்கான பொருள் தேடலில் இருந்து
விடுபட்டு வெளியே வந்து நான்கு நண்பர்களிடம் கருத்துப் பரிமாற்றம் செய்வதற்குள் நமக்கு விரக்தியும் சோர்வும் அண்டிவிடுகிறது. ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தால் தான் மீண்டும் அந்த நட்பைத் தொடர முடிகிறது. விட்டுக் கொடுத்தல் என்பது நல்ல அணுகுமுறைதான் ஆனால் தவறான முடிவுகளுக்காக விட்டுக் கொடுப்பது என்பது வேதனையே. இந்த வேதனையில் இருந்து விடுபட இயலாமை உணர்வுக்கு ஆட்படுகிறோம். அப்பொழுது நமது இயலாமை நம்மை திரும்பவும் நமது பாதுகாப்பான இடத்திற்கே இட்டுச் செல்கிறது. அப்பொழுது நமது இருப்பு என்பது இந்தச் சமூகத்தில் நாம் விழிப்புணர்வு பெற்றாலும் நாகரீகமானவர்களாக இருந்தாலும் வெறும் பார்வையாளனாக இயலாதவனாகத் தானே இருக்கிறோம்
No comments:
Post a Comment