Monday, June 10, 2013

வணக்கம் நண்பர்களே,

கொடுமணல் - ஈரோடு மாவட்டம் காங்கேயம் அருகில் உள்ளது.  மூதாதையர் வாழ்ந்த பயன் பயன்படுத்திய இடத்தையும் தடயங்களையும்  தினமலர் ஹிந்து நாளிதழ்கள் கடந்தவாரங்களில் வெளியிட்டன. இரண்டு வாரங்களாக திட்டமிட்ட பயணம் நேற்றுதான் சாத்தியமானது. நேற்றைய பயணம்  மிகவும் ஆச்சர்யமாகவும், கொஞ்சம் வெட்கமாகவும் இருந்தது. இவ்வளவு அருகிலே திருப்பூரில் இருந்துகொண்டு இருந்தும் இத்தனை நாள் இதைப் பற்றித் தெரியாமல் இருந்திருக்கிரோமே என்று.    நாங்கள் சென்றபொழுது,  இரண்டு வாரங்களுக்கு முன்னால் வருகைபுரிந்திருந்தால் ஆய்வுப் பணிகளையும், ஆய்வில் கிடைத்த பொருட்களையும் பார்த்திருக்கலாம் என்று அந்தப் பகுதியில் வசிக்கும் ஒருவர் கூறினார். மேலும் இது குறித்த தகவல்களைப் பெற சோமு என்பவரை பாருங்கள் என்று கூறினார். புறப்படுவதற்கான நேரம் வந்துவிட்டது அவரைப்பார்க்கலாமா வேண்டாமா என்று 
யோசித்தது அவரைப்பார்த்து உரையாடியபின் தவறு என்று உணர்ந்தோம்.

 சோமு அவர்கள் இருக்கும் இடத்திற்குச் 
சென்றவுடன் மிகவும் எளிமையான கொங்குமண்டல விவசாயி ஒருவரை காண்பித்து இவர்தான் என்றார்கள். வந்த காரணத்தை சுருக்கமாகக் கூறினோம். நீங்கள் இடத்தைப் பார்வையிடச் செல்லும்போது என்னை அழைத்திருந்தால் நானும் உங்களுடன் வந்து எல்லவற்றையும் விளக்கமாகக் கூரியிருப்பேனே என்றார். அவருடைய நிலத்தில்தான் ஆராய்ச்சிப்பணிகள் நடைபெற்றதாகக் கூறினார்.
அறிமுகப்படலத்தில் அவர் பெயர் சோமு என்கிற இராமச்சந்திரன்  அந்தப் பகுதியின் தற்போதைய மணியகாரர் (VAO) என்றும் திருப்பூரில் computerised embroidery தொழில் செய்து கொண்டு இருக்கிறார் Msc மற்றும் LLB பட்டதாரி என்பதை தெரியப்படுத்தினார். மனதுக்குள் நிமிர்ந்து உட்கார்ந்தோம். இந்த இடத்தில தேங்காய் களமும் ஆயில் மில்லும் உள்ளதாக கூறினார். இவ்வளவு எளிமையா என்று வியப்பு (வெளியில் காட்டிக்கொள்ளவில்லை). பேசப் பேச அவருக்கு இந்த அகழ்வாராய்ச்சி குறித்த 
ஆழமான அறிவும் அவருடைய ஈடுபாடும் முயற்சியும்  அவர்பால் மிகுந்த மரியாதையை எங்களுக்கு
ஏற்ப்படுத்தியது. புகைப்படத் தொகுப்புகள், பத்திரிகையில் வந்த செய்திகள் என்று 
ஒரு மணி நேரம் எங்களுக்காக பொறுமையாக நிறைய விளக்கங்கள் கொடுத்தார். இடையே சுவையான தேநீரும் கிடைத்தது. (அந்தக் கிராமத்தில் ஒரு டிக்கடை கூட இல்லை)

இரண்டாயிரத்து  ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு நமது மூதாதயர்கள் ரோமானியர்களுடன் வணிகம் செய்ததற்கான சான்றுகள் தொல்பொருள் ஆராய்ச்சியில் கிடைத்துள்ளன.  உலகம் முழுவதிளிமிருந்து ஆராய்ச்சியாளர்கள், பாண்டிச்சேரி பல்கலைக்கழக மாணவர்கள் வருகை தந்து அடிப்படை வசதிகள் இல்லாத இந்தச் சிறிய கிராமத்தில் தங்கி ஆய்வுகள் செய்கிறார்கள் என்று கூறினார். மாணவிகள் பெண்கள் தங்கி ஆராய்ச்சிகள் செய்ய போதுமான வசதிகள் இல்லை என்று கூறினார். தற்போதைய 
மாவட்ட ஆட்சியர் இங்கு வந்தபோது இதற்கான வசதிகளுடன் ஒரு காட்சிக்கூடம் அமைத்துத் தருவதாக உருதியளித்திருப்பதாகக் கூறினார். சங்ககாலத் தமிழர்களுடைய தொழில் மதிநுட்பத்தையும் 
கடல் கடந்து வாணிபத்தில் ஈடுபட்டதையும் மிகவும் சிலாகித்துப் பேசிகொண்டிருந்தோம். அப்போதே 
பருத்தி நூல் நெசவு செய்ததர்க்கான சான்றுகள் பற்றிய பேச்சின் போது, இன்றைய திருப்பூரின் வளர்ச்சியை மனம் தொடர்பு படுத்திப் பார்த்தது.
 
இடையே அவருக்கு  வறட்சி நிவாரணப் பணிக்கான வேலைகள் குறிக்கிட்டதால் அவரிடம் விடைபெற்றோம். கடந்த இருபது வருடங்களாக இந்த ஆராய்ச்சிப் பணிகளுக்கு தமது நேரத்தையும் பொருளையும் அளித்துக்கொண்டிருக்கும் இவரை நமது Tirupur Nature Society துவக்க விழாவிற்கு அழைத்து மரியாதை செய்ய வேண்டும். மேலும் விபரங்களுக்கு நக்கீரன் தளத்தில் எடுக்கப்பட்ட விபரங்களைக் கொடுத்துள்ளேன்.

நன்றி,
விசு.

கொசுறு: இருபது ஆண்டுகளுக்கு முன் எழுதிய தேர்வுக்கு கடந்த ஆண்டு அவருக்கு VAO பதவி கிடைத்துள்ளது. கொடுமணல் ஊரட்சித்தலைவராக அவருடைய தம்பியை போட்டியின்றி அந்தஊர் மக்கள் தேர்வு செய்து அவருடைய குடும்பத்திர்க்கு  மரியாதை செய்துள்ளனர். 

Wednesday, June 5, 2013

இன்று உலக சுற்றுச் சூழல் தினம்.

இன்று எங்களது கம்பெனிக்கு எதிரில் உள்ள பொது குடிநீர்க்குலாயிளிருந்து கேட் வால்வ் பழுதடைந்து சாலையில் தண்ணீர் விரயமாகிக்கொண்டிருந்த்தது.  எங்கள் செலவில் அதனைச் சரிசெய்து கொடுத்தோம்.