பறவை நோக்கல்
பறவை நோக்கல் என்பதன் அடிப்படை நோக்கம் அதன் அழகைப் பார்த்து வியப்பது, அதனைப் படம்பிடிப்பது, எந்த வகை மற்றும்
என்ன பெயர் என்று தெரிந்துகொள்வது என்று வெறுமனே பொழுது போக்கு என்றில்லாமல் அவற்றின் வாழ்வு முறை, உணவுப்
பழக்கம், இனப்பெருக்கம், கூடுகட்டும் முறை, வலசை வருதல் போன்றவற்றையும் உற்று நோக்கி அவைகளையும் நாம் பதிவு
செய்யவேண்டும். பல்லுயிரியச் சுழற்சியில் பறவைகளின் பங்களிப்பைப் புரிந்து கொண்டு அதன் முக்கியத்துவத்தை எல்லோருக்கும் தெரியப்படுத்தவே ண்டும். சுற்றுச் சூழல் வளமாக இருக்கின்றதா மாசுபட்டிருகின்றதா என்பதை தெரிந்துகொள்ள பறவைகள் பற்றிய இந்தப் பதிவகள் மூலமாக நாம் அறியலாம். எனவே நண்பர்களே நாம் பறவை நோக்கலில் இன்னும் அறிமுகக் கட்டத்திலேயே இருக்காமல் அடுத்தகட்டத்திற்குச் செல்வது பற்றி ஆலோசித்து நடவடிக்கையில் இறங்கலாம்