Friday, August 31, 2012

தற்காலத்தில் நமது உணவருந்தும் பழக்கம் வெகுவாக மாறிவிட்டது. குடும்பமாக உட்கார்ந்து அம்மா அன்புடன் சமைத்து 
அக்கறையுடன் பரிமாறிய நமது பாரம்பரியப் பழக்கம் வெகுவாகக் குறைந்துவிட்டது. அன்புடன் பரிமாறப்படும் உணவு ஊட்டச் 
சத்துள்ள உணவு சாப்பிட்டால் எந்த அளவு நமக்கு  நன்மை பயக்குமோ அதை விடச் சிறந்தது என சமீபத்திய ஆய்வுகள் நமக்குத் 
தெரிவிக்கின்றன. குறைந்த பட்சம் இரவு உணவை குடும்பத்துடன் அன்புடன் பரிமாறப் பட்டு சாப்பிடும் குழந்தைகள் மற்ற 
குழந்தைகளை விட நன்றாகப் படிக்கிறார்கள் என்றும் புகைப் பழக்கம், குடிப்பழக்கம் மற்றும் போதைப் பொருள்களுக்கு அடிமையாவதில் மற்ற குழந்தைகளை  விட விழுக்காட்டில் குறைவாகவே உள்ளார்கள் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 
Allow a little leeway In addition to all its other benefits, "having dinner together is probably the single most important way to promote good health and nutrition," says Dr David Ludwig, an associate professor of paediatrics at Harvard Medical School and author of Ending the Food Fight.
தொலைக்காட்சிப் பெட்டி முன்னால் பரிமாறினாலும் அன்புடன் பரிமாறப்பட்டால் குடும்பத்துடன் சாப்பிடும் குழந்தைகள் நல்ல 
ஆரோக்கியமாக  இருக்கிறார்கள் என்பது வியப்பான உண்மை. Dr. Ludwig கூற்றுப்படி என்ன சாப்பிடுகிறோம் என்பதைவிட 
எவ்வளவு அதிக நேரம் கும்பத்துடன் சாப்பிட எடுத்துக்கொள்கிறோம் என்பதுதான் முக்கியம். இரவுதான் சேர்ந்து உணவருந்தவேண்டும் என்பதில்லை காலையில் கூட அல்லது வார இறுதியில் கூட இதனைப் பின்பற்றலாம். இதனை ஒரு வழக்கமாக உருவாக்கித்  தவறாமல் பின்பற்றவேண்டும். இப்படிச் செய்வதனால் குழந்தைகளும் அவர்களுடைய அன்றாட நிகழ்வுகளை நம்முடன் பகிர்ந்துகொள்வார்கள். முயற்சிசெய்துதான் பார்க்கலாமே. 

No comments:

Post a Comment